முல்லைத்தீவில் அதிகரித்து செல்லும் மழைவீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்பு

Mullaitivu Sri Lanka Climate Change
By Keethan Dec 23, 2023 05:02 PM GMT
Report

டிசம்பர் மாதத்தில் பெய்த அதிகளவான மழைவீழ்ச்சியினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 20 பெரிய நடுத்தரகுளங்களும் 390 சிறிய குளங்களும் நிரம்பியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளர் சு.விகிர்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியின் அளவு அதிகரித்துக்கொண்டு செல்வதாக நீர்பான திணைக்கள புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யாழில் 20 இளைஞர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

யாழில் 20 இளைஞர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

அதிகளவான மழைவீழ்ச்சி

அவர் மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான பெரிய, நடுத்தரகுளங்களான 20 குளங்கள் (வவுனிக்குளம், முத்தையன்கட்டுளம், தண்ணிமுறிப்பு குளங்கள் உள்ளிட்ட) நிரம்பி வான்பாய்ந்துள்ளதுடன் குளங்களின் சில வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

இதனை விட மாவட்டத்தில் உள்ள 390 சிறிய குளங்கள் நிரம்பி வழிந்துள்ளன. இதற்கான காரணம் காலநிலை மாறிக்கொண்டு செல்கின்றது என்பதை காணக்கூடியதாக உள்ளது வவுனிக்குளம் கடந்த மூன்று ஆண்டுகள் வான்பாயாத நிலையில் இந்த முறையே வான் பாய்கின்றது.

முல்லைத்தீவில் அதிகரித்து செல்லும் மழைவீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்பு | Increasing Rainfall In Mullaithivi

இந்த ஆண்டு டிசம்பர் 17 வரையில் மாதந்தம் சராசரியாக 1387.39 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. நீர்பாசன திணைக்களத்தின் பதிவின் படி 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டுவரை ஆண்டுக்கு சராசரியாக 1383 மில்லிமீற்றர் மழை கிடைத்துள்ளது.

எனினும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 17 வரை மாத்திரம் 2255 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. இலங்கையின் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியே 1500 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்குட்பட்டதாகவே காணப்படுகின்றது.

சராசரி மழைவீழ்ச்சி

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்னும் மழை இருப்பதாக சொல்லப்படுகின்றது எதிர்வரும் 26 ஆம் திகதி ஒரு தாழமுக்கம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

முல்லைத்தீவில் அதிகரித்து செல்லும் மழைவீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்பு | Increasing Rainfall In Mullaithivi

வவுனிக்குளத்திற்கு கீழ் சராசரி மழைவீழ்ச்சியை விட இருமடங்கு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. முத்தையன் கட்டுகுளத்திலும் இவ்வாறுதான் தண்ணிமுறிப்பு குளத்திலும் இவ்வாறுதான் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வவுனிக்குளத்திற்கும்,தண்ணிமுறிப்பு குளத்திற்கும் மேல் உள்ள சிறுகுளங்கள் சடுதியாக பெருக்கெடுத்து பாய தொடங்கியதால் சடுதியாக நீர் ஏறதொடங்கியுள்ளது. இதனால் தண்ணிமுறிப்பு குளத்தின் கதவுகள் தொடச்சியாக திறந்துவிடப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் அதிகரித்து செல்லும் மழைவீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்பு | Increasing Rainfall In Mullaithivi

முல்லைத்தீவில் குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் குளத்தினை பாதுகாக்கவேண்டிய தேவையும் உள்ளது மக்களையும் விவசாயத்தினையும் பாதுகாக்கவேண்டிய தேவையும் உள்ளது வெள்ளத்தினை தவிர்க்கமுடியாத நிலை ஒன்று உள்ளது இதனால் விவசாயிகளுக்கே அதிக பாதிப்பினை ஏற்படுத்தும்.

தற்போதும் குளங்களின் நீர் நிலைகளை குறைத்து வைக்கவே விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

யாழின் வீதியோர நிழல் தரு மரத் தெரிவில் மாற்றம் கோரும் மக்கள் (Photos)

யாழின் வீதியோர நிழல் தரு மரத் தெரிவில் மாற்றம் கோரும் மக்கள் (Photos)

தம்புள்ளையில் சுற்றிவளைக்கப்பட்ட பெரிய வெங்காய களஞ்சியசாலை

தம்புள்ளையில் சுற்றிவளைக்கப்பட்ட பெரிய வெங்காய களஞ்சியசாலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US