இலங்கையில் அதிகரிக்கும் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள்..! சோதனையில் வெளியான தகவல்
இலங்கையின் முன்னணி பாதாள உலகக் கும்பல்கள், உள்நாட்டிலேயே ஆயுத தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட தீவிர பொலிஸ் சோதனைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதில் உள்ள கடுமையான சிரமங்கள் காரணமாக, இந்த நாட்டில் செயல்படும் பாதாள உலகக் கும்பல்கள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை நாட்டிலேயே தயாரிக்கத் தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கொழும்பு பிரதேச பாதாள உலகக்கும்பல்களின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான மஹவத்த சாமரவின் குழுவினர் பயன்படுத்திய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன மினி ஊஷி துப்பாக்கியொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் உள்நாட்டு தயாரிப்புக்கள்
இதனைத் தொடர்ந்து, நேற்று(03.06.2026) கொழும்பில் உள்ள மற்றுமொரு முக்கிய பாதாள உலகப் புள்ளியான தெமட்டகொட சமிந்தவின் புதல்வன் மலீஷவினால் மறைத்துவைக்கப்பட்டிருந்த, உள்நாட்டுத் தயாரிப்பான 19 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எனினும், அந்தத் துப்பாக்கிகள் எங்கு, எப்படித் தயாரிக்கப்பட்டன என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
தெமட்டகொட சமிந்தவின் மகன் மலிஷவின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்தத் துப்பாக்கிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகவும், குற்றவாளிகளுக்குச் சொந்தமான துப்பாக்கிகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படுவதால் அவர்கள் உள்நாட்டிலேயே துப்பாக்கிகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan