அனிஞ்சியன்குளம் பகுதியில் அதிகரித்த யானை அச்சுறுத்தல் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மல்லாவி - அனிஞ்சியன்குளம் பகுதியில் உள்ள சந்தை வீதியில் யானைத் தாக்குதலில் இருந்து மூவர் உயிர் தப்பியுள்ளதாகவும் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(28.09.2026) இடம்பெற்றுள்ளது.
அனிஞ்சியன்குளம் பகுதியில் உள்ள சந்தை வீதியில் யானைத் தாக்குதலில் இருந்து மூன்று நபர்கள் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை தாக்குதல் அதிகரிப்பு
அதே சமயம், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் யானையின் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளது.
அண்மையில் அனிஞ்சியன்குளம் மயான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் யானையால் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

அதே போன்று, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியும் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனிஞ்சியன்குளம் வீதியில் யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் சற்று அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.