ஒன்றாரியோவில் லேக்சோர் கிழக்கு தொடரி வழித்தடத்தில் கோ தொடரிச் சேவை அதிகரிப்பு
ஒக்டோபர் 27 முதல், ஒன்றாரியோவில் லேக்சோர் கிழக்கு தொடரி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமான நேரங்களில் ஆறு புதிய தொடரிகளை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இது, ஸ்காபரோ வாழ் மக்களுக்கு நாளாந்தாம் விரைவானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சேவையை வழங்கும்.
அதிகூடிய போக்குவரத்து நெரிசல் நேரங்களில் இப்போதுள்ள 15 நிமிடங்களுக்கு ஒருமுறையான சேவை, 10 நிமிடங்களுக்கு ஒரு தொடரி என அதிகரித்து இயக்கப்படும்.
சிறந்த சேவை
இதனால், வேலை மற்றும் பாடசாலைகளிலிருந்து வீடு திரும்புவோர் விரைவாக வீட்டிற்குச் செல்ல முடியும். அதிகூடிய போக்குவரத்து நெரிசலுள்ள நேரங்களாக காலை 7 மணி முதல் 8:30 மணி வரையும், பின்நேரம் 4 மணி முதல் 6 மணி வரையுமாக வரையறுக்கப்பட்டுள்ள நேரங்களில், மக்களுக்கு வசதியான சேவைகளை இது உறுதிப்படுத்துகிறது.

இந்தச் சேவை அதிகரிப்புகள், ஸ்காபரோவில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட பயண நேரங்களைக் குறைத்து அவர்களின் பயணங்களை இலகுவாக்குவதற்குமான எமது உறுதியான நிலைப்பாட்டின் ஓர் அங்கமாகும்.
பயண நேரங்களிடையே குறைந்த காத்திருப்பு நேரத்தில், நகரின் பல பகுதிகளையும் எளிதாகச் சென்றடையக்கூடியதான முன்னெப்போழுதுமில்லாதளவான சிறந்த சேவை இப்போது வழங்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |