பிரதான ஆறுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மோசமாகும் நாட்டு மக்களின் நிலை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால், பிரதான ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், களனி கங்கை, மகாவலி கங்கை, கிங் கங்கை, நில்வளா கங்கை உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பத்தேகமை பகுதியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை
அத்துடன் நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால், தல்கஹாகொடை மற்றும் பனதுகம ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையை அடுத்து கலவெல்லாவ பகுதியிலும் வெள்ளநீர் புகுந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆறுகளின் நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.