சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாத்திரம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரம்புக்கனை பிரதேசத்தில் 3பேரும், கிரியுல்ல பகுதியில் ஒருவரும், நாரம்மல பகுதியில் ஒருவரும் பலியாகினர்.
இதன்படி, கடந்த 27ஆம் திகதி முதல் இன்று வரையில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 7,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி யாழ்ப்பாணத்தில் பதிவானதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அனா்த்த முகாமைத்துவ மத்திய மையத்தின் பேச்சாளா் பிரதீப் கொடிப்பிலி தொிவித்துள்ளாா்.
யாழ்ப்பாணத்தில் 243 மில்லிமீற்றா் மழை வீழ்ச்சி பதிவானதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தநிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யலாம் என்றும் அவா் வானிலை மையத்தை கோடிட்டு தகவல் வெளியிட்டுள்ளாா்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இயற்கை சீற்றத்தினால் இதுவரை சுமாா் 7 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தொடா்ந்தும் விக்டோாியா, லக்சபான உட்பட்ட நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனையடுத்து மகாஓயா, களனி, களு மற்றும் ஜின் கங்கையின் நீர்மட்டங்கள் உயா்ந்து வருகின்றன.
எனவே பொதுமக்கள் உாிய அவதான எச்சாிக்கைகளை பின்பற்றுமாறு அனா்த்த முகாமைத்துவ மத்திய மையத்தின் பேச்சாளர் தொிவித்துள்ளாா்

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
