அதிர்ச்சியளிக்கும் முட்டையின் விலை
இனி வரும் காலங்களில் முட்டை ஒன்றின் விலை 80 ரூபாவைத் தாண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
பண்டிகைக் காலத்தில் முட்டை நுகர்வு அதிகரிப்பதன் காரணமாக முட்டையின் விலை வெகுவாக அதிகரிக்கக் கூடும் என்று அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்.
தற்போது முட்டையின் தேவை குறைந்துள்ளதால் சந்தையில் முட்டை விலை 50ரூபாவில் இருந்து 60ரூபா வரை காணப்படுகின்றது, எனினும், வருங்காலத்தில் முட்டை நுகர்வு அதிகரிப்பதால், முட்டையின் விலை வேகமாக அதிகரிக்கலாம் என்று சங்கத்தின் தலைவர் சிசிர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உணவுப் பாதுகாப்பை அடைவது இன்று பெரும் சவாலாக மாறியுள்ளது. இன்று நாம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் உணவு பற்றாக்குறை பற்றி பேச வேண்டும்.
முட்டையின் விலையை கட்டுப்படுத்த முடியாது

இந்த பிரச்சினை சிறு குழந்தை, கர்ப்பிணி தாய் மற்றும் பாலூட்டும் தாய் ஆகியோரை பாதித்துள்ளது. இன்று புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களின் விலையேற்றமும், தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.
மக்களுக்குத் தேவையான விலங்குப் புரதங்களைத் தடையின்றி வழங்குவது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் அனைத்துப் பிரிவுகளின் பொறுப்பாகும்.
ஆனால் அதிகாரிகளின் பிரச்சனைகளை விவாதிக்க மட்டுமே மாநாடுகள் உள்ளன. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டம் அவர்களிடம் இல்லை.
அத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டால், அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மின் கட்டணம், எரிபொருள் விலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால், சிறு, கோழி மற்றும் பால் பண்ணையாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.
கோழித் தொழிலில் மருந்தின் விலையும் மிக வேகமாக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியில் 70% சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
முட்டை தொழிலை விட்டு வெளியேறினால், எதிர்காலத்தில் முட்டை விலையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri