98,000 கோடி ரூபாய் வரிப்பணத்தை வசூலிக்க முடியாத நிலையில் அரசாங்கம்
அரசால் வசூலிக்கப்படக்கூடிய 98,000 கோடி ரூபாய் வரிப்பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பணத்தை வசூலிக்காமல் நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழு வேறு உண்மைகளை முன்வைத்து வசூலிப்பதனை தவிர்க்கும் கோட்பாட்டை பின்பற்றுவதாக தெரியவந்துள்ளது.
நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் வரி வசூலிப்பவர்களை பாதுகாப்பதில் முன்னணியில் உள்ளனர்.
வரித் தொகை
2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகம் தயாரித்த அறிக்கையில், அரசாங்கம் வசூலிக்கக் கூடிய 90,400 கோடி ரூபாய் வரித் தொகை வசூலிக்கப்படவில்லை என முதலில் தெரியவந்துள்ளது.
இது தெரிய வந்து ஓராண்டுக்கு மேலாகியும், அந்த வரி திருடர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
இதற்கிடையில், 98,000 கோடி வசூலிக்கப்பட வேண்டிய வரி கைவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்திற்கு இது தொடர்புடைய குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் மார்ச் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்ட வரி 65 ரூபாவிலிருந்து 1 ரூபாவாக குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் வரி மோசடி செய்பவர்களுக்கு அரசாங்கம் மேலும் உதவும் செயலாகியுள்ளதென குற்றம் சுமதப்பட்டுள்ளது.