இன்றுடன் முடிவடையும் காலக்கெடு! இறைவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்த வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (30) முடிவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.
அபராதங்கள் மற்றும் வட்டி விதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது வரிகளை இன்றைய தினத்திற்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும்
வரி விதிப்புக்கு உட்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்கள், இதுவரை தங்களது வரிகளை செலுத்தாத பட்சத்தில், அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இணையவழி வரி செலுத்தும் தளம் வழியாகவோ அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலோ பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உதவி தேவைப்படும் வரி செலுத்துவோர் 1944 என்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்: 5 நாள் முடிவில் நடிகர் நானியின் தி பாரடைஸ் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri