பலர் முன்னிலையில் இளைஞர்களின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம்
களுத்துறை - பண்டாரகம வல்கம சுனாமி வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இரண்டு இளைஞர்களைக் கூரிய ஆயுதத்தினால், தாக்கி கைகளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு இளைஞரின் கை துண்டாகும் வகையில் வெட்டப்பட்டுள்ளதுடன், மற்றைய நபரின் இடது கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் இரண்டு கைகளில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர் வீதியில் ஓடிச் சென்று வல்கம மயானத்திற்கு எதிரில் விழுந்துள்ளார்.
மற்றைய நபர், ஓடிச் சென்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, அண்மையில் விடுதலையான நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் அதனை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri