யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்பு
யாழ்ப்பாணம்(Jaffna) பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக சூரிய பண்டார உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்றுள்ளது.
பதவி ஏற்பு நிகழ்வு
இந்நிகழ்வில், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதுவரை யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய ஜகத் விசாந்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று சென்றமையால் அவருடைய பதவிநிலைக்கு சூரிய பண்டார நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
