தலைமன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்தியாவுக்கு தஞ்சம்
தலைமன்னாரிலிருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.
குறித்த மூவரும் இன்றையதினம் (05.07.2024) காலையை சென்றடைந்தனர்.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோக வள்ளி (வயது-34),அவரது பிள்ளைகளான அனுஜா (வயது-08),மிஷால் (வயது-05) ஆகியோர் தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர்.

தகவல் அறிந்த கடற்பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மூவரும் இந்தியா செல்வதற்கு படகு கட்டணமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் பொலிஸார் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனர்.

தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri