இலங்கையின் 9 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவியேற்பு
புதிய இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று(25) நியமிக்கப்படட்டுள்ளனர்.
அந்த வகையில், சப்ரகமுவ ஆளுநராக சம்பா ஜானகி ராஜரத்ன பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்பாக இன்று பதவியேற்றனர்.
இலங்கையின் 9 மாகாணங்களில் சப்ரகமுவ மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களுக்கான ஆளுநர்களே இன்று பிற்பகல் 2 மணியளவில் பதவிப் பிரமாணம் செய்தனர்.
இவ்வாறு பதவியேற்ற 8 ஆளுநர்களும் அந்தந்த மாகாணங்களில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பிரகாரம் வடக்கு ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம், மத்திய மாகாண ஆளுநராக பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சரத் அபேகோன், தென் மாகாண ஆளுநராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திர, ஊவா மாகாண ஆளுநராக கபில ஜயசேகர, சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி ஆகியோர் உள்ளிட்ட ஆளுநர்களே இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan