சிரியாவில் அசாத் நடைமுறைப்படுத்திய மரண இயந்திரம்: அம்பலப்படுத்திய சர்வதேச போர்க்குற்ற சட்டத்தரணி
சிரியாவில் உள்ள வெகுஜன புதைகுழிகள் உள்ள இடங்களில் இருந்து வெளிவரும் சான்றுகள், ஆட்சி கவிழ்க்கப்பட்ட தலைவர் பசார் அல்-அசாத்தின் கீழ் அரசாங்கம் நடத்திய மரண இயந்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக சர்வதேச போர்க்குற்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
தகவல்களின்படி, 2013 முதல் 100,000 க்கும் மேற்பட்டோர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவர் மதிப்பிட்டுள்ளார். டமாஸ்கஸ{க்கு அருகிலுள்ள குதாய்பா மற்றும் நஜா நகரங்களில் உள்ள இரண்டு வெகுஜன புதைகுழி இடங்களைப் பார்வையிட்ட பின்னர் பேசிய,அமெரிக்காவின் முன்னாள் போர்க்குற்றத் தூதர் ஸ்டீபன் ராப் இந்த தகவல்களை ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
நாஸிக்களுக்குப் பிறகு இதுபோன்ற எதையும் தாம்; உண்மையில் பார்த்ததில்லை என்றும் ருவாண்டா மற்றும் சியரா லியோன் போர்க்குற்ற தீர்ப்பாயங்களின் வழக்குகளில் தலைமை தாங்கிய ஸ்டீபன் ராப் கூறியுள்ளார்.
இரகசிய பொலிஸார்
மக்களை காணாமல் ஆக்கிய இரகசிய பொலிஸார் முதல், அவர்களை பட்டினி போட்டு சித்திரவதை செய்து கொன்ற சிறைக்காவலர்கள் மற்றும் விசாரணையாளர்கள் வரை, அவர்களின் உடல்களை மறைத்த பாரவூர்தி ஓட்டுநர்கள்; வரை, ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கொலை முறையில் பணியாற்றி வந்தனர் என்றும் ராப் கூறியுள்ளார்.
எனினும் மொஸ்கோவிற்கு தப்பிச் சென்ற அசாத், தனது அரசாங்கம் மனித உரிமை மீறல்களைச் செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து வந்ததுடன், தனது எதிர்ப்பாளர்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்திருந்தார்
இதேவேளை டமாஸ்கஸ{க்கு வடக்கே 25 மைல் தொலைவில் உள்ள குதாய்பாவிற்கு விஜயம் செய்த அமெரிக்காவை தளமாகக் கொண்ட, சிரிய அவசரகால பணிக்குழுவின் தலைவர் மௌவாஸ் மௌஸ்தபா, அங்கு மட்டும் குறைந்தது 100,000 உடல்கள் புதைக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளார்.
இதற்கிiடையில், சிரியாவில் இன்னும் சரிபார்க்கப்படாத 66 வெகுஜன புதைகுழிகள் இருக்கலாம் என்பதைக் குறிக்கும் தரவுகளைப் பெற்றுள்ளதாக ஹேக்கில் உள்ள காணாமல் போனவர்கள் குறித்த சர்வதேச ஆணையம் தனித்தனியாகக் கூறியுள்ளது. அத்துடன் 157,000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஆணையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |