இனி எதிர்கட்சிகளிலிருந்து ஜனாதிபதி உருவாகப் போவதில்லை
இந்த நாட்டில் இனிவரும் காலங்களில் எதிர்க்கட்சிகளில் இருந்து ஜனாதிபதி உருவாகப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.
எதிர் வரும் காலங்களில் தொடர்ச்சியாக எமது கட்சியின் ஜனாதிபதிகளே இந்த நாட்டை ஆட்சி செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை ரத்து செய்தல் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த சட்டம் எமக்காக கொண்டு வரப்பட்டது எனவும் இந்த நாட்டில் மீண்டும் எதிர்க்கட்சியிலிருந்து ஜனாதிபதிகள் உருவாகப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் எமது கட்சியிலிருந்து மட்டுமே ஜனாதிபதிகள் உருவாவார்கள் என்பதனால் நாம் இந்த சட்டத்தை கொண்டு வந்தோம் எனவும் இது யாரையும் பழிவாங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் இல்லம், செயலாளருக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வ கொடுப்பனவு, வாகனங்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு உள்ளிட்ட சில கொடுப்பனவுகள் இந்த சட்டத்தின் ஊடாக நிறுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் சிறிய தொகை சேமிக்கப்படுகின்றது என்றாலும் இந்த வீடுகளை புனரமைப்பு செய்வதற்காக பல மில்லியன் ரூபா செலவிடப்பட்டதனை நம் அவதானித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலை எந்த திசையில் நகர்த்துவது என்பது குறித்த தீர்மானமாக இந்த சட்டத்தை பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.




