ஈக்வடரில் தொலைக்காட்சி நிலையத்தை முடக்கிய ஆயுததாரிகள்
ஈக்வடரில் தொலைக்காட்சி நிலையமொன்றை நேரடி ஒளிபரப்பின் போது ஆயுதமேந்திய குழு தாக்கி, ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர்களையும், அதில் கலந்து கொண்டவர்களையும் ஆயுதமேந்திய குழுவினர் மிரட்டுவதும், துப்பாக்கியை காட்டி மிரட்டி பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொள்வதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.
ஒரு பிராந்திய ஊடக ஆய்வாளர் கருத்துப்படி,
“குறைந்தபட்சம் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
Que pena todo lo que esta pasando con los hermanos del canal tc televisión, Dios los cuide pic.twitter.com/behRNVacSz
— Emergencias Ec (@EmergenciasEc) January 9, 2024
தொலைக்காட்சி மீதான தாக்குதல்
ஈக்வடாரின் மிகப்பெரிய நகரமான குவாயாகுவில் உள்ள தொலைக்காட்சி மீதான தாக்குதலில் நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு சுமார் 15 நிமிடங்கள் ஆயுதமேந்திய குழுவின் அச்சுறுத்தல் செயற்பாடானது ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது முகமூடி அணிந்த நபர்கள், தங்களிடம் வெடிகுண்டுகள் இருப்பதாகக் கூச்சலிட்டு, தலைமையகத்திற்குள் புகுந்ததுள்ளனர்.” என்றார்.
ஈக்வடர் நாட்டில் உள்ள மிகப்பெரிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பியுள்ளதாகவும் இந்த விடயம் அந்த நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
?MORE BREAKING NEWS?
— ??Patriots??Against??Predators!!?? (@PredatorHunterz) January 10, 2024
⚠️FROM ECUADOR⚠️
Armed gangs have reportedly stormed University of Guayaquil, attempting to kidnap students!!!
Hostage on live on air on local television in Ecuador??? pic.twitter.com/v9vspECVpe
ஆயுத மோதல்
சிறையில் இருந்து குற்றவாளி தப்பியதன் பின் ஈக்வடர் நாட்டில் அவர்களின் பெயர் அறவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில மணி நேரத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி டேனியல் நோபோவா(Daniel Noboa) நாட்டில் உள்நாட்டு ஆயுத மோதல் உருவாகி இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் ஆயுத மோதலில் ஈடுபடும் நபர்களை வெளியேற்ற நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் ஜனாதிபதி நோபாவா அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |