மக்களுக்கான நிதியுதவிகளை இழுத்தடிக்கும் அநுர அரசு..! இம்ரான் எம்.பி கண்டனம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka Government Imran Maharoof Economy of Sri Lanka
By Kiyas Shafe Jun 04, 2026 12:58 PM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை வழங்குவதில், அரசாங்கம் திட்டமிட்டபடி இழுத்தடிப்புகளைச் செய்து வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(04.06.2026) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சாலே வழக்கில் பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு..!

சுரேஷ் சாலே வழக்கில் பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு..!

மக்களுக்கான நிதியுதவி

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த திருகோணமலை மாவட்ட மக்கள் தற்போது தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளனர்.

எனினும், அவர்களது வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளமையால், தற்போதும் தற்காலிக இருப்பிடங்களிலேயே அவர்கள் சொல்லொணாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். ​

அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களுக்காக பாதிக்கப்பட்ட மக்களின் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டு, அவர்களது பெயர்கள் இறுதிப் பட்டியலில் உள்வாங்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான வீட்டுப் படிக் கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் தேவையற்ற இழுத்தடிப்புகளைச் செய்து வருகின்றது. ​

மக்களுக்கான நிதியுதவிகளை இழுத்தடிக்கும் அநுர அரசு..! இம்ரான் எம்.பி கண்டனம் | Imran Mp On The Government S Current Situation

சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுக்கும் அப்பால், மேலதிக ஆவணங்களைக் கோரி, அவை சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி பலரது வீட்டுக்கான கொடுப்பனவுகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. ​கிராம உத்தியோகத்தர்களும் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான வழிகாட்டல்களின்படி உரிய தகைமைகள், புனர்வாழ்வு அட்டைகள் போன்ற அனைத்தும் மக்களிடம் உள்ளன.

வீடுகள் பாதிக்கப்பட்டதை நேரில் அவதானித்து சிபார்சுக்குழுவும் தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. ​நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது இம்மக்களிடம் மேலதிகமாக 'பொலிஸ் அறிக்கை' கோரப்படுகின்றது. சுற்றறிக்கையில் இல்லாத ஒரு விடயத்தை ஏன் கேட்கிறீர்கள் என்று அதிகாரிகளிடம் வினவினால், அது 'மேல்மட்ட உத்தரவு' என்று கூறி தட்டிக்கழிக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் திட்டம்

யுத்த காலத்தில் பொலிஸ் அறிக்கைகளைத் தொலைத்த பொதுமக்கள், தற்போது பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று அதன் பிரதியைக் கோரினால், பழைய ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று பொலிஸார் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மக்களுக்கான நிதியுதவிகளை இழுத்தடிக்கும் அநுர அரசு..! இம்ரான் எம்.பி கண்டனம் | Imran Mp On The Government S Current Situation

இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புத் குழுத் தலைவரான பிரதியமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளித்த போதிலும், இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. ​எனவே, அரசாங்கம் மக்களுக்கு வீடு வழங்குவது போல் காட்டி, உண்மையில் அதனை வழங்காமல் ஏமாற்றுவதற்கான முயற்சிகளையே முன்னெடுத்து வருகிறதா என்ற பலத்த சந்தேகம் எழுகின்றது.

இது ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிப்பது போன்றதொரு செயலாகும். ​அரசாங்கம் தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக, இது போன்ற தந்திரங்களைக் கையாண்டு நிதியை மீதப்படுத்த முயற்சிக்கின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது என்றார்.   

பாடசாலை மாணவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

பாடசாலை மாணவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US