இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய எச்சரிக்கை! திரைமறைவில் தீட்டப்படும் சதி
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும், தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை குறைவடையலாம் என பொய்யான தகவல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான போலி செய்திகளை பயன்படுத்தி திரைமறைவில் சதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால், நாட்டில் வாகனங்களுக்கு பாரிய கேள்வி தற்போது நிலவி வருகின்றது. வாகனங்களின் விலைகள் தற்போது 100 வீதம் அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிலையில், விரைவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சில வாகன விற்பனையாளர்கள் போலி செய்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகின்றது.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும், வாகன விற்பனை நிலையங்களில், தற்போது வாகனங்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலி செய்திகளை பரப்பி, வாகன உரிமையாளர்களிடமிருந்து வாகனங்களை கொள்வனவு செய்து, எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிக விலைக்கு வாகனங்களை விற்பனை செய்யும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பெரும்பாலும், எதிர்வரும் மார்ச் மாதம் அல்டோ கார் ஒன்றின் விலை 40 லட்சம் ரூபா வரை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
வெகன் ஆர் ரக கார் ஒன்றின் விலை 80 லட்சம் ரூபா வரை அதிகரிக்கும் அதேவேளை, பிரியஸ் காரின் விலை ஒரு கோடி ரூபா வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
