லெபனானில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Sri Lanka Lebanon Foreign Employment Bureau Israel-Hamas War
By Anadhi Oct 09, 2024 12:03 AM GMT
Report

லெபனானில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

லெபனானின் தற்போதைக்கு நிலவும் போர் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, லெபனானுக்கு வந்த பின்னர் அதே பதிவை புதுப்பிக்காமல் நீண்ட காலமாக பணியில் இருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அதானியின் காற்றாலை திட்டம்: புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இந்திய அதானியின் காற்றாலை திட்டம்: புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

03 மாத காலத்திற்கு நடைமுறை

இதற்கான சலுகை காலம் 2024 ஒக்டோபர் 08 முதல் 2025 ஜனவரி 08 வரை, 03 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் தூதரகத்திற்கு வந்து பதிவுகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

லெபனானில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல் | Important Notice To Srilankan Workers In Lebanan

அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வரும் போது பின்வரும் ஆவணங்களை தூதரக அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

01. செல்லுபடியாகும் விசா மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (இந்த ஆவணங்கள் கட்டாயமாகும்.

02.தற்போதைய வேலை ஒப்பந்தம் (Current Employment Contract) அல்லது தற்போதைய பணியிடத்துடன் தொடர்புடைய வேலை வழங்குநரால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு கடிதம் (Job Offer Letter)

03. எண் (01) இல் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் இருந்தும் கூட, தற்போதைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் (Current Employment Contract) அல்லது வேலை வழங்குநரால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்பு கடிதம் (Job Offer Letter) இல்லாதவர்கள், தூதரகத்தால் வழங்கப்பட்ட சுய-விபர படிவத்தை (Self-Declaration) பூர்த்தி செய்து, அங்கு பதிவு செய்யலாம்.

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி

பதிவு செயல்முறை

இந்த பதிவு செயல்முறைக்கு 62 அமெரிக்க டொலர்கள் அரசாங்கக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

லெபனானில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல் | Important Notice To Srilankan Workers In Lebanan

யுத்த சூழ்நிலையில், இந்த சிறப்பு சலுகை காலத்தை ஒரு சிறந்த வாய்ப்பாகக் கொண்டு, பணியகத்தில் பதிவுசெய்து, பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிமையுள்ள நலன்புரி மற்றும் காப்பீட்டு சலுகைகளைப் பெற்று, பணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

லெபனானி்ல் உள்ள இலங்கைத் தூதரகம் இதற்காக விசேடமாக 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும், அன்றைய தினத்தை தொடர்ந்து அடுத்த 03 மாதங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களும் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு: 1. 00961-81685186/00961-81915603 கௌசி அல்லது குமாரி, 00961-79125589 தூதரக அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் ஐ.நாவுக்கு விசேட கடிதம்

தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் ஐ.நாவுக்கு விசேட கடிதம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US