இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி
பெய்ரூட்டில் நேற்று (07) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஆயுத தலைமையகத்தின் முக்கிய தளபதி சுஹைல் ஹுசைன் ஹுசைனி (Suhail Hussein Husseini) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் (Israel) பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
சுஹைல் ஹுசைன் ஹுசைனி, குழுவின் உயர்மட்ட இராணுவ அமைப்பான ஹிஸ்புல்லாவின் ஜிஹாத் கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
முக்கிய பொறுப்புக்கள்
மேலும், ஈரானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான ஆயுத பரிமாற்றங்களில் ஹுசைனி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அதேவேளை, இந்த ஆயுதங்களின் போக்குவரத்து மற்றும் ஒதுக்கீடு ஆகிய இரண்டையும் மேற்பார்வையிட்டு, மேம்பட்ட ஆயுதங்களை ஹிஸ்புல்லாவின் பிரிவுகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பாளராகவும் அவர் இருந்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை கூறியுள்ளது.
அத்துடன், தெற்கு லெபனானில் நேற்று (07) 120 இலக்குகள் மீது 100இற்கும் மேற்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தாக்குதல்களை நடத்திய நிலையில் தற்போதே இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam