அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து அநுரவுக்கு வந்த முக்கிய தகவல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய அத்தியாயம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்வுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாக்கும் வகையில் இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட தயார் என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து
பொருளாதார வளர்ச்சி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஜனநாயக ஆளுகை ஆகிய பல துறைகளின் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய உதவ தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் நிலையான, வளமான மற்றும் நியாயமான நாடொன்றைப் பற்றிய எதிர்பார்ப்பை அடைவதற்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இலங்கையில் ஜனநாயக ரீதியில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல், எதிர்காலத்தை வடிவமைத்து கொள்வதற்காக இலங்கை மக்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக, அமெரிக்க ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 7 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
