ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்க தயார்: ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட செய்தி
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான பலவற்றிற்கு சாட்சியங்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி தனக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் அதனை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் ரவீந்திரன் குகன் என அழைக்கப்படும் முகமட் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (08.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற போது, நான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தேன். அதன்போது அங்கு இருந்து முக்கிய நபர் குண்டு வெடிப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் அனைவருக்கும் கேக் வழங்கினார்.
குண்டு வெடித்ததன் சில நிமிடங்களில் என்னை அழைத்து உங்கள் சஹ்ரான் வெடித்துவிட்டான் என்று கூறினார்.
இவ்வாறான பல உண்மைகள் என்னிடம் உள்ளன. அவற்றினை நான் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன். ஆனால், அவற்றினை ஒரு ஆணைக்குழு நியமிக்கும்போதே என்னால் வழங்கமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
