தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வடக்கு தொடருந்து வீதியில் இன்று (05.01.2022) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே தொடருந்துகள் இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து வீதியின் நவீனமயமாக்கல் பணி
மஹவ மற்றும் ஓமந்தை பகுதிகளுக்கு இடையிலான தொடருந்து வீதியின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மாத்திரம் தொடருந்து சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு அநுராதபுரத்தில் இருந்து பேருந்துகள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சன் டிவி சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது.. அவரே பகிர்ந்த குழந்தை போட்டோ Cineulagam

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
