119 அவசர அழைப்பு இலக்கம் தொடர்பில் பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல்
119 அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் தேவையான குறுகிய தொலைபேசி இலக்கம் குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை பொலிஸார் விடுத்துள்ளனர்.
119 அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்ட அழைப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, உடனடி பொலிஸ் நடவடிக்கை தேவைப்படும் முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, இந்த அவசர சேவையை தவறாக பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை
இதன் காரணமாக, உண்மையான அவசர சந்தர்ப்பங்களில் 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போவதுடன், அத்தியாவசிய அவசர முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த 119 இலக்கங்களுக்கு தவறான தகவல்களை வழங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் அரச ஊழியருக்கு தெரிந்தே தவறான தகவல்களை வழங்குவது இலங்கை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொலிஸாரின் நேரடி உதவி அவசியமில்லாத ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தந்த நிறுவனங்களுக்குரிய குறுந்தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறும், இந்த அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan