இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (18) சற்று குறைந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக இன்று (18) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1700 ரூபாவினால் குறைந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாய்க்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது $4,317.00 முதல் $4,352.60 அமெரிக்க டொலர்கள் வரை பதிவாகியுள்ளது.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan