இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
பொதுமக்கள் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும்போது, அவற்றின் தரம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களில் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த 11,261 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
உணவுப்பொருட்கள் விற்பனை
பொதுச் சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது சுகாதாரமற்ற முறையிலும், காலாவதியான திகதியுடனும் உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சில வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, அவற்றின் தரம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
