பெற்றோருடன் ஹோட்டலுக்கு சென்ற குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்
கண்டியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த சிறுவனின் சகோதரரும் அதே நீச்சல் குளத்தில் மூழ்கி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரெல்லாகம, குருதுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று (28) விடுமுறையை கழிப்பதற்காக இரண்டு சிறுவர்களும் பெற்றோருடன் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில், நீச்சல் தடாகத்திற்கு அருகில் தனியாக இருந்த போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி தலைமையக பொலிஸார் விசாரணை
சகோதரன் நீரில் மூழ்குவதை அவதானித்து அவரது மூத்த சகோதரர் நீச்சல் குளத்தில் குதித்து தனது தம்பியைக் காப்பாற்ற முயற்சித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் இருந்த 7 வயது சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
