யாழில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்!

Fuel Price In Sri Lanka Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Theepan Mar 28, 2026 11:29 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டம் நேற்று(27.03.2026) நடைபெற்றுள்ளது.

இதில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைவராகவும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இணைத்தலைவராகவும் தலைமை தாங்கியுள்ளனர்.

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் ஒருங்கிணைப்புக்குழுவின் செயலாளருமான ம.பிரதீபனின் வரவேற்புரையுடன் ஆரம்பமானதுடன், மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் சமகால சவால்கள் தொடர்பில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

யாழில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்! | Important Decision At Jaffna Committee Meeting

அத்துடன், மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் விநியோகத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

குறிப்பாக, யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே பொருட்கள் போக்குவரத்தில் ஈடுபடும் பாரவூர்திகளுக்கான மேலதிக எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு

மேலும், கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் அந்தந்த அமைப்புக்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும், ஏனைய தொழிற்துறையினர் பிரதேச செயலகங்கள் ஊடாக தமது கோரிக்கைகளை முன்வைத்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய அனுமதிகள் இதன் பின்னர் வழங்கப்பட்டன. மேலும், யாழ். மாவட்ட செயலகம், வடக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசின் திணைக்களங்களால் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

யாழில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்! | Important Decision At Jaffna Committee Meeting

அத்துடன், பிரஜாசக்தி தேசிய நிகழ்ச்சித் திட்டம் மற்றும் தூய்மையான இலங்கை வேலைத்திட்டங்களின் நடைமுறை நிலைப்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழான வீதிகளின் திருத்தப் பணிகள், படகுச் சேவைகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

தொழில்துறை சார்ந்த தீர்மானங்கள்

போக்குவரத்துச் சேவைகளான பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை (சிசுசரிய), இரவு நேர சேவை (நிசுசரிய) மற்றும் தொழில்துறை சார்ந்த இடங்களுக்கான போக்குவரத்து சேவை (ஹமிசரிய) ஆகியவற்றின் நிலை குறித்தும் ஆராயப்பட்டது.

இராணுவ நடவடிக்கைகள் நீடிக்காது! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

இராணுவ நடவடிக்கைகள் நீடிக்காது! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண அவைத்தலைவர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தீர்வு காணப்படாது மாவட்டக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டன.

யாழில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்! | Important Decision At Jaffna Committee Meeting

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, சி.சிறீதரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், முப்படையினர், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றனர். 

யாழில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்! | Important Decision At Jaffna Committee Meeting

ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை

ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை


மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US