ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்
ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான புறப்பாடுகள் மற்றும் வருகைகள் இன்று (28) முதல் வழமைக்கு திரும்பும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அரசியல் தலையீடுகள் காரணமாக விமானக் கொள்வனவு இரத்துச் செய்யப்பட்டமையினால் விமான நிறுவனம் தற்போதைய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக விமான சேவையின் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹசந்த யசரத்ன தெரிவிக்கையில்,
புதிய விமானங்கள் கொள்வனவு
தற்போது எங்களிடம் 24 விமானங்கள் உள்ளன. அதில் 18 விமானங்கள் மட்டுமே இயங்குகின்றன. மற்றையவையின் இயந்திரங்களில் பிரச்சினைகள் உள்ளன. இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பொதுவான பிரச்சினையாகும்.
2021 இல் புதிய விமானங்களை கொள்வனவு செய்ய தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை திட்டமிடப்பட்டது. அப்போது கோப் குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களால் விமானங்களை வாங்குவது இரத்து செய்யப்பட்டன.
அரசியல் பங்காக ஆக்கப்பட்டதால் அது அரத்து செய்யப்பட்டது. இந்த நேரத்தில் சுற்றுலா மிகவும் சிறப்பாக உள்ளது. உண்மையில் விமானங்கள் இருந்தால், செயல்பாடுகள் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். விமானங்கள் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாகும்" என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |