இந்த நாட்களில் அவதானமாக செயற்படுமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்
இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபாய்டு பக்டீரியா (typhoid Bacteria) (குடற்காய்ச்சல்) பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மலக் கழிவுகளால் டைபாய்டு பக்டீரியா உருவாகின்றதாகவும்,பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பக்டீரியா பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியில் உணவு உண்பவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
நோய் அறிகுறிகள்
இந்த பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களை தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த பக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், மெதுவாக இதயத்துடிப்பு, சோர்வு மற்றும் இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
டைபாய்டு பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைத்து சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் இதற்கான தடுப்பூசிகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |