பௌத்த குருமார்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை இந்து குருமாருக்கும் வழங்க வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை(Video)

Sri Lankan Tamils Batticaloa Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Kumar Jul 26, 2022 10:10 AM GMT
Report

இலங்கையில் பௌத்த மதகுருமாருக்கு வழங்கும் முக்கியத்துவத்தினை ஏனைய மதகுருமார்களுக்கும் வழங்கப்படவேண்டும் என கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச.லோகநாதன் குருக்கள், செயலாளர் சிவஸ்ரீ சி.குகநாத குருக்கள் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.


வலியுறுத்தல்

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ சி.குகநாதன் கருத்து தெரிவிக்கையில், “எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெறுவதற்காக குருமார் செல்லும் போது, அங்கே குருமார்கள் புறக்கணிக்கப்படுவதும், சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படுவதுமான செயற்பாடுகளால் இந்து குருமார் எரிபொருளை பெறாமலேயே வீடுகளுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.

இதனை மட் டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்துக்கு கடந்த மாதம் எமது ஒன்றியத்தால் பல கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றினை கையளித்திருந்தோம்.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபரால் நாட்டிற்கு எரிபொருள் வருகின்ற போது, உங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கு சில எரிபொருள் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவோம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டது.

தற்போது அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் போதியளவு எரிபொருள் வந்து கொண்டிருக்கிறது. அதனை மக்களும் தங்களது வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கத்துக்கமைய பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதன்போது பல முறைகேடுகளும் அரங்கேறி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்து குருமார்கள் தமது பூசை கடமைகளுக்காகவும், சமூக மேம்பாட்டுக்காகவுமே எரிபொருளை பெறசெல்கிறோம்.

மதவழிபாட்டினை முன்னின்று நிகழ்த்த அனைவரும் முன்வருவதில்லை. ஒரு சிலரே முன்வருகின்றனர். எனவே அவர்கள் அக்கடமைகளை செவ்வனே நிகழ்த்த சமூகத்திலுள்ளவர்கள் உறுதுணையாக செயற்பட வேண்டும்.

அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் பொலிஸாரும் இடையூறாக செயற்படுகின்றனர். இவற்றோடு பௌத்த குருமார்களுக்கு வழங்கப்படும் உன்னதமான நிலை ஏனைய மதகுருமார்களுக்கு வழங்கப்படுவதில்லை.

இனிவரும் காலங்களில் எமக்கான எரிபொருளை வழங்க இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அரச அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குப் பணிப்புரை வழங்க வேண்டும்.

அவ்வாறு செய்யாத பட்சத்தில் நாம் நீதிகோரி வீதிக்கிறங்க வேண்டிய துயரநிலை ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்து குருமார்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள்

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாத குருக்கள் கருத்து தெரிவிக்கையில் “கோவிட் தொற்று காலத்தில் இந்து குருமார்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஆலய பூசை வழிபாடுகளை உரிய வகையில் நிகழ்த்தியுள்ளனர்.

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பூசை வழிபாடுகளை நிகழ்த்த வேண்டியுள்ளது. இந்நிலையில் எரிபொருள் நிரப்ப செல்கையில் பல்வேறு இடர்கள், இன்னல்கள் மற்றும் கசப்பான சம்பவங்களை எதிர்கொள்கின்றனர்.

எரிபொருள் நிலையங்களில் சமூகத்திலுள்ள ஏனையோர் போன்று வரிசையில் நின்று எரிபொருள் பெறமுடியாது. ஏனெனில் காலை, மதியம், பிற்பகல் பூசை வழிபாடுகளை நிகழ்த்த செல்ல வேண்டியுள்ளது.

ஒரு குருவானவர் ஐந்து, ஆறு ஆலயங்களுக்கு சென்று பூசை செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் எரிபொருள் உரிய வேளையில் கிடைக்காத பட்சத்தில் பூசை வழிபாடுகளை உரிய காலவேளையில் நிகழ்த்த முடியாமல் போய்விடும்.

பௌத்த குருமார்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை இந்து குருமாருக்கும் வழங்க வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை(Video) | Importance Accorded Buddhist Hindu Association

இதனால் தெய்வ குற்றத்துக்கு ஆளாக வேண்டியேற்படும். மதத்தை இழிவுபடுத்தும் செயற்பாடுகளில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஈடுபடுகின்றார்.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகையோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்போம்” அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவில் பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இன்மையால் மக்கள் ஏமாற்றம் (Photo) 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US