இலங்கையின் பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்துங்கள்-இங்கிலாந்திற்கு கூறும் ஜனாதிபதி
இங்கிலாந்தில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பயிற்சி ஓட்டமாக (Test Run) இலங்கையின் பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55வது நிர்வாக சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணம்

இந்த கூட்டம் முதலில் இலங்கையில் நடத்தப்படவிருந்தது. கோவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக அந்த கூட்டம் நிறுத்தப்பட்டது. இலங்கைக்குள் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய சில பொருளாதார கொள்கைகள் காரணமாக நாட்டிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இப்படியான கொள்கைகள் காரணமாக இங்கிலாந்தும் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
1976 ஆம் ஆண்டுக்கு பின்னர் பவுண்ட்டின் மதிப்பில் வீழ்ச்சி

பிரித்தானிய நாணயமான பவுண்ட் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 1976 ஆம் ஆண்டுக்கு பின்னர் வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்க டொலருக்கு நிகராக பவுண்ட்டின் மதிப்பு குறைந்து காணப்படுகிறது.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், வாழ்க்கை செலவு அதிகரிப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் காரணமாக நுகர்வோர் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டை விட 10.6 வீதமாக அதிகரித்துள்ளன.
மேலும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. அத்துடன் கடன்களுக்கான வட்டி வீதமும் அதிகரித்துள்ளது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri