திருகோணமலையில் வயோதிபரொருவர் கைது
வயோதிபர் கைது
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மான் இறைச்சியை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வயோதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த வயோதிபரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவெவ - யாய 06ஆம் இலக்க பகுதியைச் சேர்ந்த ஹல்பவத்தகே சுமந்த பீரிஸ் (வயது 56) என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட மான் இறைச்சி
மொரவெவ பிரதேசத்துக்கு பொறுப்பான விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த வயோதிபரின் வீட்டை சோதனையிட்ட போது மான் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் இன்றய தினம்
முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



