அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய விவகாரம்: ரோஸி சேனாநாயக்க விளக்கம்
அரச வாகனங்களை முறைக் கேடாக பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தன்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்படுவதாக முன்னாள் கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில்இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தொிவிக்கையில்,
வாகனங்களைப் பற்றி சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் குற்றம்சாட்டப்படுவது மூன்று பெண்கள் மாத்திரமே. ஊடகங்களும் இதை சரியாக ஆராய வேண்டும். தேர்தலின் போது, என் மீது அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு, அவதூறாகப் பேச முயன்றனர்.
உத்தியோகபூர்வ வாகனங்கள்
கடந்த ஆண்டு என்னிடம் வழங்கப்பட்ட கார் மிகவும் பழுதடைந்த ஒன்றாகும். எனக்கு எட்டு வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கொடுக்கப்பட்டன. இதன் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகரான பின்பு இந்த குறிப்பிட்ட வாகனமே எனக்கு வழங்கப்பட்டது. கூடிய காலம் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனம் என்பதால் அதனை நான் வேண்டாம் என்றேன்.
இருப்பினும், வேறொரு வாகனம் வழங்கப்படும் வரை இதனை பயன்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு குறிப்பிட்டு சொல்லும் வாகனம் மிகவும் பழுதடைந்த வாகனமாகும். முன் கதவுகளில் இருந்து தண்ணீர் கசிந்த நிலையிலேயே நான் அதனை பயன்படுத்தினேன்.
எரிபொருள் செலவும் அதிகம். இது என் பெயரில் வாங்கிய கார் அல்ல. அரசு கொடுத்த வாகனமாகும். இந்த வாகனங்களை மட்டும் குறிவைத்து என்மீது சேறு பூசும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடுகின்றனர்.
நான் செய்த வேலைகள் கொழும்பு மக்களுக்குத் தெரியும் இந்த வாகனத்தை யார் கொண்டு வந்தார்கள் என்பதைக் கண்டறியுமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதுபற்றி மக்களும் அறிந்து கொள்ளலாம்” என ரோஸி சேனாநாயக்க மேலும் தொிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
