கொழும்பில் முக்கிய கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக்கட்சிகள்: வெளியாகவுள்ள தீர்மானம்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த 2 மாவட்டங்களிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான யோசனையை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்வைத்திருந்தது.
இந்த நிலையில் நாளை மறுதினம் (04) இடம்பெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின் பின்னர் அவர்களது தீர்மானம் அறிவிக்கப்படும் என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் முக்கிய கலந்துரையாடல்
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் இலங்கை தமிழரசு கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
