120 ரூபாவாக குறையும் பெட்ரோலின் விலை! உண்மைத் தன்மையினை வெளியிட்ட அநுர தரப்பு
எரிபொருளின் விலையை குறைப்பது தொடர்பில் நான் தெரிவித்தாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
சவால் விடும் ஹந்துன்நெத்தி
ஒரு லீட்டர் பெட்ரோலுக்கான வரியை நீக்கிய பின்னர் அதனை 120 ரூபாவுக்கு சந்தையில் தர முடியும் என நான் அந்த அறிக்கையும் விடவும் இல்லை. அது தொடர்பில் பேசவுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நான் அவ்வாறு கூறியதாக யாராவது தெரிவித்தால் அது தொடர்பான காணொளியை பகிரங்கப்படுத்துமாறு தான் சவால் விடுவதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.
இதேவேளை, நான் கூறியதாகக் கூறப்படும் அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு போலிச் செய்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறான கருத்தை நான் வெளியிடவில்லை. அப்படியான ஒரு காணொளி இருந்தால் அதனை வெளியிடுமாறு சவால் விடுக்கின்றேன் என தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |