சட்டவிரோத கடலட்டைப் பண்ணை ஒழிக்கப்பட வேண்டும்..! கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு
சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தமது கடற்பரப்பில் பரந்து செல்வதால் நாளாந்த சிறு கடல் தொழிலைக் கூட செய்ய முடியாது நிர்க்கதி நிலைக்கு தாம் தள்ளப்பட்டிள்ளதாக கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(21.03.2026) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் மீது குற்றச்சாட்டு
அவர்கள் மேலும் கூறுகையில்,
கிராஞ்சி கடற்பகுதியில் தற்போது கடற்றொழில் சமூகத்தினரை தவிர்ந்த ஏனையவர்களே பல நூறு ஏக்கர் கடற்பரப்பில் பண்ணைகளை வைத்துள்ளனர்.
இதில் சிலர் சட்டவிரோதமாக 30 முதல் 40 ஏக்கர் வரை கபளீகரம் செய்து தமது பண்ணைகளை முன்னெடுக்கின்றனர். இதனால் எமது பொருளாதாரம் முற்றாக பறிக்கப்பட்டு விட்டது.

நாம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனிடம் இது தொடர்பில் முறையிட்டும் ஏதும் நடக்கவில்லை. அவர் பண்ணையாளர்களுக்கே விசுவாசமாக செயற்படுகின்றார்.
நாம் எமது நிலையை சொன்னால் வருகிறார், பார்க்கிறார் தீர்வு மட்டும் தருவதாக இல்லை. ஏனெனில் அவருக்கு பண்ணை உரிமையாளர்களுடன் முரண்பட விருப்பமில்லை.
சட்ட நடவடிக்கை எடுப்போம் என எமக்கு சாக்குப்போக்கு சொல்லி காலத்தை ஓட்டுகின்றார். எனவே எமது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கு உரிய தீர்வை அனுர அரசு தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri