ஈரானின் ஏவுகணை தாக்குதல்! இஸ்ரேலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலி்ல் உள்ள இலங்கைத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைப் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் காயமடைந்துள்ளதாக அத்தூதரகம் மேலும் கூறியுள்ளது.

இவ்வாறு காயமடைந்த நான்கு இலங்கையர்களும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டிமோனாவின் மீது பறந்த ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏன் தடுக்கவில்லை என்பதை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தன.
இடைமறிக்கும் விமானங்கள் ஏவுகணையைத் தாக்கியும் அதை அழிக்கத் தவறிவிட்டதாக இராணுவம் கூறியுள்ளதுடன்,"இந்தச் சம்பவம் விசாரிக்கப்படும்," என்றும் முறையான ஆய்வு நடைபெற்று வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.