கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு: மக்கள் குற்றச்சாட்டு
கிளிநொச்சி - கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிராம மக்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான எல்லைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு
கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறை வைத்து சிறுபோகம் செய்து வரும் விவசாயிகளின் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் 30 அடி ஆழத்தில் இருந்த ஆற்றுப்பகுதி தற்பொழுது 50 அடிக்கும் மேலாக மணல் அகழ்வால் பாதிப்படைந்துள்ளதுடன், அருகில் உள்ள வயல் நிலங்கள் இடிந்து விழுவதாகவும் தமது விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பல தடவைகள் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடமும், தர்மபுர பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தமக்கான வாழ்வாதார நிலங்களை பாதுகாத்து தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |