இலட்சக்கணக்கில் குவிந்துள்ள சாரதி அனுமதிபத்திரங்கள்: வெளியான புதிய அறிவிப்பு
தற்காலிக சாரதி அனுமதிபத்திரம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்கத் தொடங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அட்டைகள் இல்லாத காரணத்தினால் சுமார் 5 இலட்சம் சாரதி அனுமதிபத்திரங்கள் குவிந்துள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகள் நிறைவடையும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வாகன இலக்கத்தகடுகளில் மாகாண எழுத்துக்களை அகற்றும் நடவடிக்கை
நாளாந்தம் பத்தாயிரம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய,வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாண எழுத்துக்களை அகற்றும் நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
