நாட்டின் மீது பற்றுவைத்த சிறுவன்: உக்ரைன் இராணுவம் வழங்கிய அங்கீகாரம்
ரஷ்யா - உக்ரைன் (russia - ukraine)இடையிலான போரில் உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நாட்டின் மீது வைத்த பற்றை அந்நாட்டு இராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
போர் தீவிரமடைந்துள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் நாட்டு இராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கை அசைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான்.
இராணுவ விமானியின் செயல்
கையில் உக்ரைன் தேசிய கொடியுடன் குறித்த சிறுவன் தினமும் இராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கொடியசைப்பதை இராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.
இதற்கமைய சிறுவனின் தேச பக்தியை பாராட்ட அந்த இராணுவ விமானி முடிவு செய்துள்ளார்.
வழமையான இராணுவ பணிகளுக்கு இடையில், சிறுவன் கொடியுடன் நிற்பதை பார்த்த விமானி உடனே தனது ஹெலிகாப்டரை தரையிறக்கியுள்ளார்.
பிறகு, சிறுவனிடம் ஓடிச் சென்ற விமானி நிவாரண பொருட்களுடன் இனிப்புக்கள், பொம்மை மற்றும் உணவு உள்ளிட்டவை அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கிவைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |