குறைந்த வருமானம் பெறும் மக்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickramasinghe) முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 20 கிலோகிராம் அரிசி வழங்குவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அரிசி பொதிகள் விநியோகம்
இதற்கமைய, சம்பந்தப்பட்ட அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகள் விநியோகம் பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்,அஸ்வெசும பயனாளிகள், நலன்புரி திட்டத்திற்காக மேன்முறையீடு செய்த மக்களில் நலன்புரி நன்மைகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலம் பயன்பெறாத சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும அல்லது சமுர்த்தி நலன்புரிகள் கிடைக்காத மேலதிக நிதியுதவிகள் பெறும் முதியோர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் நாள்பட்ட நோயுற்றோர்களுக்காக இந்த அரிசி மூடைகள் வழங்கப்படவுள்ளன.
இதற்குத் தேவையான 54,800 மெட்ரிக் டொன் அரிசியை விநியோகஸ்தர்களிடம் இருந்து மாவட்டச் செயலாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் திறைசேரியினால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri