யாழில் சட்டவிரோத மணல் அகழ்வு: நேரில் சென்று ஆராய்ந்த எம்.ஏ.சுமந்திரன் (video)
யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்ந்த இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் இன்று காலை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
''யாழ். வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் மகேஸ்வரி நிதியத்தால் 2010ஆம் ஆண்டிலிருந்து 2015 ம் ஆண்டுவரை சுமார் பத்து இலட்சம் கியூப் மணல் மண்ணிற்கு அதிகமான மணல் மண் முறையற்ற விதத்தில் அகழப்பட்டு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.
கனிய வளங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மணல் அகழ்வானது நில மட்டத்திற்கு மேலாக மூன்று அடிக்கு மேல் அகழப்பட வேண்டும். ஆனால் மகேஸ்வரி நிதியத்தினால் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூன்று அடிக்கு கீழ் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மணல் அகழப்பட்டுள்ளது.
இதனால் கொட்டோடை கிராமத்தின் கணிசமான பகுதி நாசமாக்கப்பட்டுள்ள நிலையில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் கடந்த இரண்டு வருடமாக கனிய வளங்கள் சட்டத்திற்கு முரணான மணல் விநியோகம் இடம் பெற்றுவருகிறது.
இதேவேளை மணல் அகழ்வு நோக்கத்திற்காக அம்பன் கிழக்கு மற்றும் அம்பன் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் எல்லைகள் பிரிப்பு நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.‘‘

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
