கம்பஹாவில் சுற்றிவளைக்கப்பட்ட பாரிய போதைப் பொருள் வர்த்தக கும்பல்
கம்பஹா மாவட்டத்தில் பாரிய போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களின் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் ஜாஎலை அருகே ஏக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்குச் சொந்தமான சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் 39 மற்றும் 63 வயதுடையவர்கள் என்றும், பணச்சலவை சட்டத்தின் கீழ் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத சொத்து சேகரிப்பு
அதனையடுத்து சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பான புலன் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த சந்தேக நபர்களுக்குச் சொந்தமான ஆடம்பர கார்கள், முச்சக்கர வண்டிகள் என்பன கைப்பற்றப்பட்டு அவை முடக்கப்பட்டுள்ளன.
குறித்த சொத்துக்களின் பெறுமதி இரண்டு கோடியே அறுபத்தி ஆறு லட்சம் ரூபா என்று தெரிய வந்துள்ளது.
மேலும், சந்தேக நபர்களுக்கு எதிராக பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
