தலைமன்னாரில் சட்டவிரோத காணி பிடிக்கும் நடவடிக்கை: வெளியான காணொளி
தலைமன்னார் (Mannar) நடுக்குடா பகுதியில் மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தலைமையிலான குழுவினர் மக்களின் காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (09.05.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், நடுக்குடா பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட குறித்த காணி பகுதியில் வாகனத்தின் மின்குமிழ்களை ஒளிரச் செய்து அதன் வெளிச்சத்தில் காணி அடைக்கப்பட்டு வருகின்றது.
கனிய மணல் அகழ்வு
இதன்போது, அப்பகுதிக்குச் சென்ற பிரதேச மக்கள் சிலர், அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, அடாத்தாக காணி பிடிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
@tamilwinnews சட்டவிரோத காணி பிடிக்கும் நடவடிக்கை வெளியான காணொளி #lankasrinewss #Tamilwinnews #Srilanka #Mannar #thalaimannar_light_house #illegal ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா பகுதியில் தனியாருக்கு சொந்தமான
சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய
தனியார் கம்பனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக
பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வு இடம்பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
காணியை மீட்டுத்தர நடவடிக்கை
இந்த விடயம் குறித்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
மேலும், பனை உற்பத்தியை நம்பி வாழ்ந்து வந்த நிலையில், தற்போது பனை மரங்கள் உள்ள காணி அபகரிக்கப்பட்டு பனை மரங்களும் வெட்டப்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், அப்பகுதி மக்களை உள்ளே நுழைய விடாது, காணிக்கு சுற்று வேலி அடைக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த காணியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |