இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் சட்டம்: நாட்டு மக்களுக்கு சாதகமான நிலை
வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக ஒருவர் பொலிஸாருக்கு அழைக்கப்படும் போது, அந்த நபர் கேள்வி எழுப்பினால் அழைப்பிற்கான காரணத்தை உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனிப் புலனாய்வுப் பிரிவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு எதிராக எரிசக்தி துறையின் நிபுணரான விதுல ரலபனாவவினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை மனு
இந்த மனு மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு நேற்று பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதற்கமைய, ஜூன் 24ஆம் திகதி மனுவை திரும்பப் பெற உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தினம் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கட்சியினருக்கு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
