யாழில் வெளிநாட்டவரின் காணியை ஏமாற்றிய உறவினருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் ஈடு வைத்து பணம் பெற்றவரே நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக தனது உறவினர் ஒருவரிடம் கையளித்துள்ளனர்.
காணி உறுதி
குறித்த நபர் அக்காணி உறுதி பத்திரத்தை உள்ளூரில் நபர் ஒருவரிடம் 12 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்து பணம் பெற்றுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதற்கமையை கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 11 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan