தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொறிமுறை: டக்ளஸ் விளக்கம்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே நிறைவேற்றிக் கொடுக்கும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழில் (Jaffna) வேலணை - துறையூர் முருகன் ஆலய பொது மண்டபத்தில் இன்று (10.05.2024) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் வரலாறும் உண்டு.
மக்களின் கோரிக்கை
1990ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை முன்னெடுத்து வருகின்றேன்.
அதன் ஓர் அங்கமாகவே, நாம் இந்த தீவக மண்ணில் மக்களின் கோரிக்கையுடன் கால்பதித்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்த செயற்பாடும் அமையும்.
அதேநேரம், ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதியாக நான் இருக்கின்றேன்.
அதற்கு இந்த தீவக மக்களின் பங்களிப்பு அதிகமானதாக இருந்து வருகின்றது. அதனடிப்படையில், எம்மால் வளர்க்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடிந்தது.
மக்களின் தெரிவு
அதேபோன்று, எமது மக்களின் வாழ்வாதார எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்த முடிகின்றது.
மேலும், எதிர்காலத்திலும் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு தேசிய நல்லிணக்கப் பொறிமுறையே நடைமுறையில் சாத்தியமானதாக இருக்கும்.
அந்தவகையில், எமது மக்கள் போதிய அரசியல் பலத்தினை எமக்கு வழங்குவார்களாயின், அவர்களின் அபிவிருத்தி மட்டுமல்லாது அரசியல் அபிலாசைகளையும் எம்மால் பெற்றுத்தர முடியும் என்ற யதார்த்தத்தையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அது மாத்திரமன்றி, மக்களுக்கு சரியான வழி காட்டும் வகையிலும் அவர்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவு வழங்கும் வகையிலும் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
ஏனைய கட்சிகளை போன்று இழுபட்டு செல்லும் வகையில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகள் இருக்க கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
