சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்
சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்து அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவின் கீழ் இயங்கி வரும் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவினால் மக்களிடம் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக 1917 என்ற இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான செயற்பாடுகளின் மூலம் பணம் சம்பாதிப்போர் பற்றிய விபரங்களை இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் இயங்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தனிப்பட்ட குரோதம் மற்றும் வெறுப்புணர்ச்சி காரணமாக போலியான தகவல்களை இந்த இலக்கத்தின் ஊடாக வழங்கினால் அவ்வாறானவர்கள் தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.