இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டிற்குப் பின்னரான பதவிகள் குறித்து மாவை தகவல்!
இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டிற்குப் பின்னர் தான் யார் யார் எந்த எந்த பதவிகளில் வருவார்கள் எனத் தெரிய வரும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (27.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பொறுப்பேற்கத் தயார் எனக் கூறியமை தொடர்பாக ஊடக செயலாளர் அனுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் மாநாடு
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், அந்தப் பிரச்சினை எல்லோரிடத்திலும் எழுந்திருக்கவில்லை. தமிழரசு கட்சியின் மாநாடு அதனை முன்னிட்டு அந்த கிளைகள் அமைக்கும் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.
அந்த மாநாட்டில் தான் யார் பொறுப்புக்கு வரவேண்டும், யார் வருவார்கள் என்பதனை நாங்கள் தீர்மானிப்போம். மத்திய குழுவுக்கு யார் எந்தெந்த பகுதிக்கு வர விரும்புகின்றார்கள் என்ற அடிப்படையில் அந்த அமைப்பு விதியின்படி விண்ணப்பிப்பார்கள்.
அப்போது நாங்கள் இணக்க அடிப்படையில் அந்தந்த பதவிக்கு பொருத்தமான
ஒவ்வொருவருடைய பெயரையும், அவர்களுக்கு ஆதரிக்கும் நிலைமையை நாங்கள்
ஆராய்ந்து நாங்கள் தீர்மானிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
